உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆனைமடுவில் தண்ணீர் திறப்பு

ஆனைமடுவில் தண்ணீர் திறப்பு

வாழப்பாடி, ஆடிப்பெருக்கை முன்னிட்டு, சேலம் மாவட்டம் வாழப்பாடி, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் இன்று சிறப்பு பூஜை, வழிபாடு நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். அப்போது அதே பகுதியில் உள்ள வசிஷ்ட நதியில் புனித நீராடுவர்.இதற்கு புழுதிக்குட்டை, ஆனைமடுவு அணையில் இருந்து தண்ணீர் திறக்க, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டார். அதன்படி நீர்வளத்துறை அதிகாரிகள், நேற்று காலை, 8:00 மணிக்கு வினாடிக்கு, 60 கன அடி வீதம், வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டனர். 10.38 மில்லியன் கன அடி நீர், நாளை காலை, 8:00 மணி வரை திறக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை