உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொளத்துார் ஒன்றியத்தில் வினோதம்; ஒரு பஞ்.,ல் பணிபுரியும் இரு செயலர்

கொளத்துார் ஒன்றியத்தில் வினோதம்; ஒரு பஞ்.,ல் பணிபுரியும் இரு செயலர்

மேட்டூர்: கொளத்துார் ஒன்றியத்தில், ஒரு ஊராட்சியில் இரு செயலர்கள் பணிபுரியும் நிலையில், மற்றொரு ஊராட்சியில் செயலர் பணி-யிடம் காலியாக உள்ளது.சேலம் மாவட்டம், கொளத்துார் ஒன்றியத்தில், 14 ஊராட்சிகள் உள்ளன. இதில் லக்கம்பட்டி, நவப்பட்டி, மூலக்காடு, தின்னப்-பட்டி, கண்ணாமூச்சி, பாலமலையில் முறையே வெங்கடேஷ், கணேசன், பிரபாகரன், பெரியசாமி, சசிகுமார், மகாலிங்கம் செய-லர்களாக பணிபுரிகின்றனர். கொளத்துார் பி.டி.ஓ., அண்ணாதுரை, ஒன்றிய நிர்வாக நலன் கருதி கடந்த ஜூன், 27ல், ஆறு செயலர்க-ளையும் இடமாற்றம் செய்தார். இதுகுறித்து கடிதம் வந்ததும், தின்னப்பட்டி ஊராட்சி தலைவர், செயலர் பெரியசாமியை பணியில் இருந்து விடுவித்தார். 2015ல் மூன்று மாதம் கோபிநாத் பி.டி.ஓ.,வாக பணிபுரிந்தார். அப்போது அவர் விஜிலென்ஸ் போலீ-சாரால் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற அவருக்கு, பண பலன்கள் கிடைக்கவில்லை.அவரது வழக்கை விசாரணை செய்ய உயர்நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு உத்தரவிட்டது. கடந்த மாதம், 6ல், சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஒன்றிய அலுவலகம் சென்று பதிவேடு-களை ஆய்வு செய்து சென்றனர். சி.பி.சி.ஐ.டி.,க்கு மேலும் சில ஆவணங்களை வழங்க வேண்டிய இருப்பதால், 6 பேர் இடமாற்-றத்தை பி.டி.ஓ., அண்ணாதுரை ரத்து செய்தார். இதனால், 4 ஊராட்சிகளில் செயலர்கள் பழைய இடத்தில் பணிபுரிகின்றனர். ஆனால், தின்னப்பட்டி ஊராட்சி செயலர் பெரியசாமி, மூலக்காடு ஊராட்சிக்கு சென்று விட்டார். அங்கு வேலை செய்த பிரபாகரன் வேறு ஊராட்சிக்கு செல்லாமல் மூலக்காடு ஊராட்சியில் பணிபுரி-கிறார். இதனால், ஒரே ஊராட்சியில் இரு செயலர்கள் பணிபுரியும் நிலையில், தின்னப்பட்டி ஊராட்சியில், செயலர் பணியிடம் கடந்த இரு வாரங்களாக காலியாக உள்ளது. இந்நிலையில் பி.டி.ஓ., அண்ணாதுரை, கொளத்துார் ஒன்றிய ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.பி.டி.ஓ., (ஆணையாளர்) அண்ணாதுரை கூறுகையில், ''ஒரே ஊராட்சியில் இரு செயலர்கள் பணிபுரிவது தொடர்பாக, பி.டி.ஓ., செந்தில்குமாரிடம்தான் கேட்க வேண்டும்.'' என்றார்.நேற்று சாம்பள்ளி ஊராட்சியில், மக்களுடன் முதல்வர் முகாமில் பங்கேற்ற பி.டி.ஓ., செந்தில்குமார் கூறுகையில், ''நான் பணிக்கு வந்து சில நாட்களே ஆகிறது. எனவே, பதிவேடுகளை ஆய்வு செய்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை