உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எதிர்கால மரபுரிமை உலகம் எப்படி? பிப்., 16ல் கடிதப்போட்டிக்கு அழைப்பு

எதிர்கால மரபுரிமை உலகம் எப்படி? பிப்., 16ல் கடிதப்போட்டிக்கு அழைப்பு

சேலம் : சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாசலம் அறிக்கை:சர்வதேச அஞ்சல் இணையம், 150 ஆண்டுக்கு மேலாக சேவையாற்றி வளர்ச்சி பெற்றுள்ளது. இதனால், 'எதிர்கால தலைமுறையினருக்கு மரபுரிமையாக கிடைக்க இருக்கும் உலகம் எவ்வாறு இருக்கும்' என்ற தலைப்பில் கடிதப்போட்டி நாடு தழுவிய அளவில் நடக்க உள்ளது.இதில் பங்கேற்க, வயது, 9 முதல், 15க்குள் இருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய ஏதாவது ஒரு மொழியில், 800 வார்த்தைக்கு மிகாமல் கடிதம் எழுத வேண்டும். பிப்., 16ல் நடக்க உள்ள கடிதப்போட்டியின்போது வயதுச்சான்றிதழ், ஆதார் நகல் தேவை. போட்டியில் பங்கேற்போர், அதற்கான பொருட்களை கொண்டு வர வேண்டும். கடிதத்தை, 'முதன்மை அஞ்சல்துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை - 600 002' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.மாநில அளவில் முதல் மூன்று இடங்கள் முறையே, 25,000, 20,000, 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும். அதேபோல் இந்திய அளவில், 50,000, 25,000, 10,000 ரூபாய் பரிசாக கிடைக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் கூறுகையில், ''அவரவர் படிக்கும் பள்ளியில் கடிதப்போட்டி நடக்கிறது. இதுதொடர்பாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தனித்தனியே கடிதம் அனுப்பி முழு விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி, விருப்பம் உடைய மாணவ, மாணவியர், இப்போட்டியில் பங்கேற்கலாம். தகவலுக்கு, 0427 - 2266370, 2253050 என்ற எண்களில் அழைக்கலாம்,'' என்றார்.அதேபோல் மேற்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பார்த்திபனும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை