உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏற்காடு பகுதிகளில் பரவலாக மழை

ஏற்காடு பகுதிகளில் பரவலாக மழை

ஏற்காடு, ஏற்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன், மந்தமாக இருந்து வந்தது. இந்நிலையில் மாலை, 4:20 மணிக்கு ஏற்காடு மற்றும் சுற்று பகுதி முழுவதும் இடி மின்னலுடன் கூடிய கனமழை, 6:15 மணி வரை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து கனமழை குறைந்து சாரல் மழையாக இரவு 7:55 மணி வரை பெய்தது. இதனால், ஏற்காட்டில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது.* ஆத்துார் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை மழை பெய்தது. இந்நிலையில் நேற்று மாலை, 6:00 முதல், இரவு, 7:00 மணி வரை, மழை பெய்தது. இதனால் சாலை, தெருக்களில் மழை நீர் ஓடியது.* வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், மேட்டுப்பட்டி, கருமந்துறை, ஏத்தாப்பூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை, 5:00 மணிக்கு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது. இதனால் நெடுஞ்சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக, ஒரு மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டது. தொடர் மழையால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி