உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கலெக்டர் எச்சரிக்கை கடை அடைப்பு வாபஸ்

கலெக்டர் எச்சரிக்கை கடை அடைப்பு வாபஸ்

ஏற்காடு: சேலத்தை இரண்டாக பிரித்து, ஆத்துாரை புது மாவட்டமாக உருவாக்க உள்ளதாகவும் அதில் ஏற்காட்டை இணைக்க உள்ளதாகவும், சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் ஏற்காட்டில் உள்ள அனைத்து கட்சி பிரமுகர்கள், அனைத்து இயக்க தலைவர்கள், மகளிர், இளைஞர் அமைப்பினர் இணைந்து, சேலம் மாவட்டத்தில் இருந்து ஏற்காட்டை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கடை அடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதற்கு ஆதரவு தெரிவித்து அங்குள்ள, 90 சதவீத கடைகள் மூடப்பட்டன.இந்நிலையில் சேலம் கலெக்டர் கார்மேகம், 'யூகத்தின் அடிப்படையில் குந்தகம் விளைவிக்க முயன்றால் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்திருந்தார்.இதையடுத்து கடை அடைப்புக்கு திட்டமிட்ட போராட்ட குழுவினர், நேற்று காலை கடைகளை மூடிய வியாபாரிகளை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, கடைகளை திறக்க அறிவுறுத்தினர். சில இடங்களுக்கு நேரில் சென்றும் கடைகளுக்கு திறக்க கோரிக்கை விடுத்தனர். இதனால், 9:00 மணிக்கு மேல் கடைகள் திறக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி