உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வழிகாட்டல் நிகழ்ச்சி

வழிகாட்டல் நிகழ்ச்சி

எஸ்.புதுார்: எஸ்.புதுார் வட்டார வளமையத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது. வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கணேசன், ஜெயலட்சுமி, கரிசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கார்த்திகேயன், மலர்விழி கருத்துரை வழங்கினர் அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், வழிகாட்டு ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத்தலைவர், முன்னாள் மாணவர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றனர். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வி அடைவதற்கான வழிகாட்டல் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. மத்திய மாநில அரசுகள் மூலம் வழங்கப்படக்கூடிய கல்வி உதவித் தொகையை குறித்தும் வழிகாட்டப்பட்டது அனைத்து பள்ளியிலும் பிளஸ் 2 முடித்த மாணவர்களை கல்லூரியில் சேர்ப்பதற்கான வழிமுறைகளை கருத்தாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ