உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மக்கள் தொடர்பு முகாமில் ரூ.14.26 லட்சம் நலத்திட்டம்

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.14.26 லட்சம் நலத்திட்டம்

திருப்புத்துார்: திருப்புத்துார் தாலுகா ஆத்திரம்பட்டியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 59 பயனாளிகளுக்கு ரூ.14.26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன், கோட்டாட்சியர் பால்துரை, டி.எஸ்.பி., ஆத்மநாதன் முன்னிலை வகித்தனர். தாசில்தார் மாணிக்கவாசகம் வரவேற்றார். முகாமில் 45 பேரிடம் பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றார்.முகாமில், இலவச வீட்டு மனை, திருமண உதவி தொகை, இறப்பு நிவாரண நிதி ஆணை, கர்ப்பிணி ஊட்டச்சத்து பெட்டகம் உட்பட அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 59 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 26 ஆயிரத்து 576 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். ஆத்திரம்பட்டி ஊராட்சி தலைவர் நல்லகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ