உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அடிப்படை வசதிகள் இல்லாத சாலைக்கிராமம் பஸ் ஸ்டாண்ட்

அடிப்படை வசதிகள் இல்லாத சாலைக்கிராமம் பஸ் ஸ்டாண்ட்

சாலைக்கிராமம் : இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டில் கட்டடம்,கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலைக்கிராமம் பஸ் ஸ்டாண்டிலிருந்து இளையான்குடி, பரமக்குடி,ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்தூர், மானாமதுரை, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. மேலும் சாலைக்கிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பயணிகள் இங்கு வருகின்றனர். பஸ் ஸ்டாண்டில் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தினால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெயில் காலங்களில் ஒதுங்குவதற்கு கூட வழியில்லை. புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டுமென்று பலமுறை மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. மாவட்ட நிர்வாகம் சாலைக்கிராமத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை