உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முடிக்கரை அரசு பள்ளியில் ஆசிரியராக மாறிய கலெக்டர் 

முடிக்கரை அரசு பள்ளியில் ஆசிரியராக மாறிய கலெக்டர் 

சிவகங்கை : காளையார்கோவில் அருகே முடிக்கரை அரசு பள்ளியில், ஒரு நாள் ஆசிரியராக மாறிய கலெக்டர் ஆஷா அஜித் அங்கிருந்த மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் 'உங்களுடன் உங்கள்ஊரில்' முகாம், நேற்று முன்தினம்காளையார்கோவில் தாலுகாவில் நடைபெற்றது. கலெக்டர் தலைமையில், பிற துறை மாவட்ட அதிகாரிகள் முகாமில் பங்கேற்றனர். முடிக்கரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் கலெக்டர் ஆஷா அஜித் ஆய்வு நடத்தினார். அங்கிருந்த மாணவர்களின் 'ஆங்கில புலமையை' அறிந்து கொள்ள, அவரே ஒரு நாள் ஆசிரியராக மாறினார். முடிக்கரை அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பாடம் கற்பித்து ஆசிரியராக செயல்பட்டார். பாடம் எடுக்கும் போதே மாணவர்களிடம் ஆங்கிலம் சார்ந்த வினாக்களை கேட்டு, அவர்களது ஆங்கில புலமையை அறிந்து கொண்டார். கிராமப்புற பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தின் மீதான விருப்பத்தை தெரிந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை