உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அறுந்த மின்கம்பியால் பசு மாடு பலி

அறுந்த மின்கம்பியால் பசு மாடு பலி

திருப்புவனம், : திருப்புவனம் தாலுகாவில் ஒன்றரை லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. திருப்புவனம் துணை மின் நிலையத்தில் இருந்து தட்டான்குளம்,மணலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கிராமங்களுக்கு செல்லும் மின்கம்பிகள் பல 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை. பல இடங்களில் மின் கம்பி மிகவும் தாழ்வாக செல்வதால் மேய்ச்சலுக்கு ஆடு, மாடுகளை கொண்டு செல்ல முடியவில்லை. காற்றடிக்கும் காலங்களில் சில இடங்களில் மின் கம்பி அறுந்து கீழே விழுந்து விடுகின்றன.மின் கம்பிகளை மிதிக்கும் கால்நடைகள், மேய்ப்பவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. மணலுார் அருகே கடந்த வாரம் மின் கம்பி அறுந்து கிடப்பதாக மின்வாரியத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.இரு தினங்களுக்கு முன் மணலுாரைச் சேர்ந்த ராஜா என்பவரின் சினை கறவை மாடு மின் கம்பியை மிதித்ததில் உயிரிழந்தது.கறவை மாடு உயிரிழந்த இடத்தை தாசில்தார் விஜயகுமார், மின்வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர். தாழ்வாக மின் கம்பி செல்லும் இடத்தை ஆய்வு செய்து மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை