உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் குறுகிய தெருவில் போஸ்ட் ஆபிஸ் மக்கள் பயன்பாடின்றி வீணாகும் அவலம்

திருப்புத்துாரில் குறுகிய தெருவில் போஸ்ட் ஆபிஸ் மக்கள் பயன்பாடின்றி வீணாகும் அவலம்

திருப்புத்துார், : திருப்புத்துாரில் மக்களுக்கு பயன்படாமல் குறுகிய தெருவில் உள்ள சப் போஸ்ட் ஆபீசை மக்களுக்கு தேவைப்படும் இடத்திற்கு மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது.திருப்புத்துார் பழைய பஸ் ஸ்டாண்டில் ஒரு தபால் அலுவலகம் இயங்கியது. 'சப் ஆபீஸ்' என்ற தரத்திலான இந்த அலுவலகத்தில் இருவர் பணியாற்றினர். தபால் விநியோகம் தவிர தபால்களை வாங்குவது, கார்டு, லெட்டர், தபால் முத்திரை விற்பனை, வங்கி சேமிப்பு கணக்கு வரவு, செலவு என பல சேவைகளுடன் இயங்கியது. நகரில் இயங்கிய முதன்மை அலுவலகத்திற்கு நிகராக வாடிக்கையாளர் வருகையும்,, விற்பனையும் இருந்தது. பல ஊர்களைச் சேர்ந்த மக்களுக்கு இந்த அலுவலகம்பயன்பட்டது.கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்காக இந்த அலுவலகம் தற்காலிகமாக வேறிடத்திற்கு மாற்றப்பட்டது. சில வீடுகள் உள்ள குறுகிய ரோட்டில் தற்போது இந்த அலுவலகம் உள்ளது. ஒரு கடை அளவிலான சிறு கட்டடத்தில் இயங்கும் இந்த அலுவலகம் பெயரளவில் இயங்குகிறது. அதுவும் முதன்மை தபால் அலுவலகத்திற்கு மிக அருகாமையில் என்பதால் இங்கு யாரும் வரவில்லை.தற்போது புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டு விட்டது. இதனால் இந்த தபால் அலுவலகத்தை பொருத்தமான வேறிடத்திற்கு மாற்ற கோரிக்கை வைத்து தபால் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.தற்போது நகரில் 4 இடங்களில் தபால் அலுவலகங்கள் இயங்குகின்றன. நகரில் சிவகங்கை ரோட்டில் கோர்ட், , மின்துறை அலுவலகங்கள், தீயணைப்பு அலுவலகம் உள்ளன. இப்பகுதியில் தேவரம்பூர், காட்டாம்பூர், ரணசிங்கபுரம் பகுதி குடியிருப்பு விஸ்தரிப்பு பகுதியாக மாறி விட்டது.இப்பகுதியில் தபால் அலுவலகம் அமைந்தால் மக்களுக்கு தபால் மற்றும் வங்கி சேவையும் கிடைக்கும். தபால் துறையினர் இப்பகுதியில் பொருத்தமான இடத்தை தேர்வு செய்து இந்த தபால் சப் ஆபீஸை இயங்க வைக்க வேண்டியது அவசியமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை