உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாராக மாறும் கீழப்பசலை தடுப்பணை

பாராக மாறும் கீழப்பசலை தடுப்பணை

மானாமதுரை: மானாமதுரையில் புதிதாக கட்டப்பட்ட கீழப்பசலை தடுப்பணையில் குடிமகன்கள் இரவில் அமர்ந்து மது குடித்து விட்டு பாட்டில்களை உடைத்து செல்கின்றனர்.கீழப்பசலை கண்மாய்வைகை பூர்வீக பாசன பகுதியைச் சேர்ந்த கண்மாய் ஆகும். மானாமதுரை வைகை ஆற்றில்இருந்து கால்வாய் பிரிந்து செல்கிறது. கால்வாய் கட்டப்பட்டு நீண்ட காலமானதை தொடர்ந்து புதிய தடுப்பணை கட்டி கால்வாய் கட்ட வேண்டுமென்று கீழப்பசலை சுற்றுவட்டாரகிராம விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.இதனைத் தொடர்ந்து தமிழக அரசு பொதுப்பணித்துறை,நீர்வளத்துறை சார்பில் கடந்த ஆண்டு 24 கோடி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணி முடிவடைந்துள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்ட கன்மாய்களுக்காகவைகை அணையிலிருந்து3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.இந்த தண்ணீர் கீழபசலை தடுப்பணையில் சேமிக்கப்பட்டு பின்னர் கால்வாய் வழியாக கண்மாய்க்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் மது பிரியர்கள் சிலர் இரவில் இந்த தடுப்பணை ஓரத்தில் அமர்ந்து குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே விட்டு செல்கின்றனர். போதையில் தள்ளாடி தடுப்பணையில் விழும் அபாயமும் ஏற்பட்டுஉள்ளது. தடுப்பணையை பாதுகாக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்