உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை ஆனந்தவல்லி கோயிலில்  ஆடித்தபசு விழா கொண்டாட்டம்   ஆக., 7ல் கொடியேற்றம்   

மானாமதுரை ஆனந்தவல்லி கோயிலில்  ஆடித்தபசு விழா கொண்டாட்டம்   ஆக., 7ல் கொடியேற்றம்   

சிவகங்கை: மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஆடி தபசு விழா ஆக.,7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஆடி தபசு விழா ஆக.,6ம் தேதி மாலை 5:00 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூதைஜயுடன் துவங்குகிறது. ஆக., 7ம் தேதி காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.தொடர்ந்து அன்றைய தினம் விநாயகர், அம்பாள், சண்டிகேஸ்வரர் சப்பர ஊர்வலம் நடைபெறும். ஆடித்தபசு விழாவை முன்னிட்டு தினமும் இரவு சுவாமி, அம்பாளுடன் சிம்மம், அன்னம், கமல, யானை, கிளி, ரிஷப, காமதேனு, குதிரை வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.ஆக., 15ம் தேதி காலை அம்பாள் ரதத்தில் எழுந்தருள்வார். இரவு புஷ்ப பல்லக்கில் காட்சி அளிக்கிறார். ஆக.,16 அன்று காலை அம்பாள் தபசு மண்டபத்தில் எழுந்தருள்வார். அன்று இரவு கொடியிறக்கம் நடைபெறும். ஆக., 17 அன்று மாலை 4:00 மணிக்கு பிரதோஷம், மாலை சந்தனக்காப்பு அலங்காரத்துடன் விழா நிறைவு பெறும். தேவஸ்தான கண் காணிப்பாளர் சீனிவாசன், ஸ்தானிகம் சோமசுந்தர பட்டர் ஆகியோர் விழா ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்