உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் எரியாத உயர்கோபுர மின் விளக்கு

சிவகங்கையில் எரியாத உயர்கோபுர மின் விளக்கு

சிவகங்கை : சிவகங்கை மஜித்ரோடு, போஸ் ரோடு சந்திப்பு, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக எரியாத ஹைமாஸ் விளக்குகளால் மக்கள் இருளில் தவிக்கின்றனர்.சிவகங்கை மஜித்ரோட்டில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 14,15வது வார்டு சந்திப்பு பகுதியாகும். இங்குள்ள ஹைமாஸ் விளக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எரியவில்லை. பஸ் ஸ்டாண்டில் இருந்து கலெக்டர் அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன், செந்தமிழ் நகர், புதுார், உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் இந்த வழியாக தான் செல்கின்றனர்.மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதி என்பதால் இரவு நேரங்களில் எரியாத விளக்குகளால் திருட்டு பயம் அதிகம் உள்ளது. பெரும்பாலான உயர்கோபுர மின் விளக்குகள் எரிவதில்லை. இரவில் வணிக நிறுவனங்களின் வெளிச்சத்தில் மக்கள் நடமாட்ம் இருப்பதால் அதிகாரிகளுக்கு அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.வணிக நிறுவனங்கள் இரவு 10:00 மணிக்கு மேல் மூடப்பட்ட நிலையில் பஸ் ஸ்டாண்ட் உட்பட நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளது. இரவில் 10:00 மணிக்கு மேல் நகராட்சி அதிகாரிகள் நகரை வலம் வந்தால் எரியாத விளக்குகள் பற்றிய விவரம் தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை