| ADDED : ஜூலை 11, 2024 05:09 AM
சிவகங்கை: அங்கன்வாடி திட்டத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்த பட்ச சம்பளமாக ரூ.26,000 மற்றும் 18, 000 வழங்கு, பென்ஷன் தொகையை ரூ.8,000 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ஜெயமங்கலம் தலைமை வகித்தார்.மாவட்ட பொருளாளர் லட்சுமி, மாநில செயற்குழு கவுசல்யா முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு., மாவட்ட துணை தலைவர் உமாநாத் துவக்கி வைத்தார். சங்க மாநில செயலாளர் பாக்கியமேரி சிறப்புரை ஆற்றினார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சேதுராமன் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட துணை தலைவர்கள் தவமலர், மலர், சசிகலா, எம்.சித்ரா, ராதா, கலைச்செல்வி, பி.சித்ரா பங்கேற்றனர்.