உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்பனா சாவ்லா விருதுக்கு  விண்ணப்பம் வரவேற்பு 

கல்பனா சாவ்லா விருதுக்கு  விண்ணப்பம் வரவேற்பு 

சிவகங்கை : துணிவு, வீர சாகசம் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: ஆக., 15 அன்று சென்னையில் நடக்கும் சுதந்திர தினவிழாவில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக ஏதாவது ஒரு துறையில் துணிவு மற்றும் வீரசாகசம் புரிந்து பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்க உள்ளார். இந்த விருதை தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், தன் விபரக்குறிப்பு, உரிய விபரங்கள், ஆவணங்களுடன் https://awards.tn.gov.in'' என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து, அந்த விண்ணப்பங்களை ஜூலை 8 அன்று மாலை 5:00 மணிக்குள் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ