| ADDED : ஜூன் 30, 2024 04:53 AM
சிவகங்கை : சிவகங்கை அருகே கண்டுப்பட்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் 76 ஜோடி மாடுகள் பங்கேற்றன.கண்டுப்பட்டி கேட்ட வரம் தரும் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.இதில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டையை சேர்ந்த 76 ஜோடி மாடுகள் பங்கேற்றன. 2 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் பெரிய மாட்டு பிரிவில் 23 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு பிரிவில் 53 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. போட்டியில் பெரிய மாட்டுப் பிரிவிற்கு 8 மைல் துாரமும், சிறிய மாட்டு பிரிவிற்கு 6 மைல் துாரமும் நிர்ணயம் செய்யப்பட்டது.முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.