உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை அருகே மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை அருகே மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை : சிவகங்கை அருகே புதுப்பட்டி அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.3 பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் பெரியமாட்டிற்கு 8 கி.மீ., நடு மாட்டுக்கு 7 கி.மீ.,, பூஞ்சிட்டு என்ற சிறிய மாட்டுக்கு 5 கி.மீ., துாரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பெரிய மாடு பிரிவில் 7 ஜோடி வண்டிகளும், நடுமாடு பிரிவில் 13 ஜோடி வண்டிகளும், சிறிய மாடு பிரிவில் 5 ஜோடி வண்டிகளும் கலந்து கொண்டன. சிவகங்கை மேலுார் ரோட்டில் நடந்த இப்போட்டியில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 25 ஜோடி மாடுகள் பங்கேற்றன.போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாடுகளுக்கும் அதன் உரிமையாளருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை