| ADDED : ஜூன் 11, 2024 07:28 AM
மானாமதுரை : மானாமதுரை பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர், சென்னை, ராமேஸ்வரம்,விருதுநகர்,செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு 400க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இந்தவழியாக செல்லும் பஸ்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் பஸ்ஸ்டாண்டிற்குள் வராமல் வெளியே பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால் விபத்துஅபாயத்தில் பயணிகள் தவிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காரைக்குடி மண்டல பொது மேலாளர்விடுத்துள்ள அறிக்கையில், மதுரை, ராமேஸ்வரம் மார்க்கத்தில் மானாமதுரை வழியாக செல்லும்பஸ்கள் அனைத்தும் இரவு நேரங்களிலும் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இந்த உத்தரவை மீறும் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மீது புகார் வந்தால் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.