உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டம்: பக்தர்கள் தரிசனம்

சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டம்: பக்தர்கள் தரிசனம்

காரைக்குடி: சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா கடந்த ஜூன் 17ம் தேதி கொடியேற்றம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தபசு காட்சியில் 63 நாயன்மார் வீதி உலாவும், திருக்கல்யாணமும் நடந்தது. நேற்று காலை வீரசேகர பிரியாவிடை உமையாம்பிகை தாயார், விநாயகர் தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து மாலையில் தேரோட்டம் தொடங்கியது.விநாயகர் தேர் முதலில் வர தொடர்ந்து வீரசேகர பிரியாவிடை தேரும், உமையாம்பிகை தேரும் நான்கு ரத வீதிகளில் சென்றது.இதில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி