உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளைஞருக்கு வெட்டு: ஒருவர் கைது

இளைஞருக்கு வெட்டு: ஒருவர் கைது

சிவகங்கை: சிவகங்கை அகிலாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி மகன் முருகன் 39. இவர் கட்டட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு நேரு பஜாரில் உறவினர்களான பூவலிங்கம் மற்றும் சதீஷ் என்பவர்களுடன் நடந்து சென்றுள்ளார்.அதே பகுதியை சேர்ந்த சோனைமுத்து என்பவர் பூவலிங்கத்துடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது முருகன், சதீஷ் விலக்கி விட முயற்சித்துள்ளனர். அவர்களுடனும் சோனைமுத்து தகராறு செய்துள்ளார். அருகில் இருந்தவர்கள் விலக்கி விடவும் கலைந்து சென்றுள்ளனர். நேற்று காலை சோனைமுத்து தனது மகன்கள் பசுபதி 30, பாலமுருகன் 28, சக்திவேல் 25 ஆகியோருடன் சென்று முருகனை வெட்டியுள்ளனர். இதில் காயம் அடைந்த முருகன் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சிவகங்கை நகர் போலீசார் சோனைமுத்து மகன் பாலமுருகனை கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ