உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டை ரஸ்தாவில் வளர்ச்சி பணிகள் மந்தம்

தேவகோட்டை ரஸ்தாவில் வளர்ச்சி பணிகள் மந்தம்

காரைக்குடி, : காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா ரயில்வே ஸ்டேஷனில் வளர்ச்சி பணிகள் மந்த கதியில் நடப்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். தேவகோட்டை, காரைக்குடி அலுவலக பணிக்கு செல்வோர், பயணிகள் என நுாற்றுக்கணக்கானவர்கள் தேவகோட்டை ரஸ்தா ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி செல்கின்றனர். இந்த ரயில்வே ஸ்டேஷனில் அம்ரூத் திட்டத்தின் கீழ் மேற்கூரை, சுற்றுச்சுவர் அமைத்தல், புதிய பிளாட்பாரம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இங்கு மந்த கதியில் பணிகள் நடப்பதால், பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மணல் குவியலாக கிடப்பதால், பயணிகள் ரயிலில் ஏற முடியாமல் தவிக்கின்றனர். இங்கு வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை