உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை சேதுபதி நகரில் நடுரோட்டில் மின்கம்பம்

மானாமதுரை சேதுபதி நகரில் நடுரோட்டில் மின்கம்பம்

மானாமதுரை: மானாமதுரை அரசு மருத்துவமனை எதிர்புறம் நகராட்சிக்குட்பட்ட சேதுபதி நகர் சந்தன விநாயகர் கோயில் சந்தில் நடுரோட்டில் மின்கம்பம் அமைந்துள்ளதால் அவ்வழியாக செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அப்பகுதி மக்கள் கூறியதாவது: சேதுபதி நகர் சந்தன விநாயகர் கோயில் சந்தில் நடு ரோட்டில் உள்ள மின்கம்பத்தை அகற்றுமாறு மின்வாரிய அதிகாரிகளிடமும், நகராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதியில் இரவு நேரங்களில் சைக்கிள் மற்றும் டூவீலர்களில் செல்பவர்கள் கூட மின்கம்பத்தில் மோதி காயமடைந்து வருகின்றனர்.இப்பகுதியில் உள்ளவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் கூட ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் கூட வர மறுக்கின்றன. மின்வாரியத்தினர் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை