உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஒரே வாரத்தில் ஐந்து டூவீலர் திருட்டு

ஒரே வாரத்தில் ஐந்து டூவீலர் திருட்டு

திருப்புவனம்: திருப்புவனம் தாலுகாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐந்து டூவீலர்கள் திருடு போனது.திருப்புவனத்தைச் சுற்றிலும் 173 கிராமங்கள் உள்ளன. இக்கிராமமக்கள் பலரும் திருப்புவனம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தினசரி கட்டட வேலை, காய்கறி வியாபாரம் உள்ளிட்டவற்றிற்காக சென்று வருகின்றனர்.போதிய பஸ் வசதி இல்லாததால் பலரும் இருசக்கர வாகனங்களையே பயன்படுத்தி நகர் பகுதிக்கு சென்று வருகின்றனர். டூவீலர்களை வீட்டு வாசலில் நிறுத்திவைப்பது வழக்கம். திருப்புவனம் வட்டாரத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐந்து டூவீலர்கள் மாயமாகியுள்ளது.திருப்புவனம் அருகே ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., காஜாமுகமது டூவீலர், மதுரை தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் காஞ்சிரங்குளத்தைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் டூவீலர், செல்லப்பனேந்தலைச் சேர்ந்த ராமநாதனின் டூவீலர், சுண்ணாம்பூரைச் சேர்ந்த அஞ்சூரான் என்பவர் பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே நிறுத்தியிருந்த டூவீலர் எனதொடர்ச்சியாக டூவீலர்கள்கடந்த ஒரு வாரத்தில் காணாமல் போயுள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை