உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை : சத்துணவு மையங்களில் காலிபணியிடம் நிரப்ப வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.சத்துணவு மையங்களில் அமைப்பாளர், உதவியாளர், சமையலர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பென்ஷன் தொகையாக மாதம் ரூ.6,750 வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டே செயல்படுத்த வேண்டும். காலமுறை ஊதியத்துடன் கூடிய பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் மங்கையர்கரசி வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஷீலா கோரிக்கையை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் அலமேலு மங்கை நன்றி கூறினார்.

அதிகாரிகள் அதிருப்தி

சிவகங்கை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என 2024 ஜன.,ல் கலெக்டர் ஆஷா அஜித் உத்தர விட்டுள்ளார். இதற்கு மாற்றாக மாவட்ட கருவூலகம் எதிரே மட்டுமே ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதிக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார். ஆனால், தொடர்ந்து கலெக்டர் அலுவலக வாசலிலேயே போராட்டம் நடத்துவதால், போலீசார் மீது கலெக்டர் அலுவலக அதிகாரிகள் அதிருப்தியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை