உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சரக்கு வாகன உரிமையாளர் கொலையில் நால்வர் கைது

சரக்கு வாகன உரிமையாளர் கொலையில் நால்வர் கைது

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், காளவாசலைச் சேர்ந்தவர் ராஜபாண்டி, 40. இவரை நேற்று முன்தினம் இரவு வடக்கு ராஜ வீதியில் மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டினர். தப்பிக்கும் முயற்சியில் அங்கிருந்த பெயின்ட் கடைக்குள் நுழைந்தவரை வெட்டிக்கொலை செய்தனர்.சிவகங்கை இன்ஸ்பெக்டர் அன்னராஜ் விசாரணையில், சிவகங்கை ராஜா சத்திரம் தெரு முத்துக்குமார், 26, காமராஜர் காலனி கவுதம், 22, பரமக்குடியைச் சேர்ந்த இத்திராஜ், 24, மற்றும் அவரது தம்பி ஆகிய நான்கு பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.கடந்த 2021ல் சிவகங்கை உடையார் சேர்வை ஊருணி அருகே முத்துக்குமார் என்பவரை கொலை செய்தனர். இந்த கொலையில் இத்திராஜ் உட்பட சிலர் ஈடுபட்டது தெரியவந்தது.ராஜபாண்டியின் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த இத்திராஜ், தன்னை அக்கொலை வழக்கில் இருந்து விடுவிக்க நிதி உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த ஆத்திரத்தில் அவரை கொலை செய்ததாக நால்வரும் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ