உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்பாச்சேத்தியில் அரசு பஸ் டயரில் தீ

திருப்பாச்சேத்தியில் அரசு பஸ் டயரில் தீ

திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி சுங்கசாவடி அருகே நள்ளிரவில் சென்ற அரசு பஸ்சின் பின்பக்க டயர் தீப்பிடித்து விபத்திற்குள்ளானது.மதுரையில் இருந்து தினசரி பரமக்குடி, ராமநாதபுரம், கமுதி, ராமேஸ்வரத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நள்ளிரவில் இயக்கப்படும் பஸ்களில் பக்தர்கள், வியாபாரிகள் பெருமளவில் பயணம் செய்கின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை 1:30 மணிக்கு மதுரை கோட்ட பஸ் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்றது. பஸ்சில் 35 பயணிகள் இருந்தனர். மதுரை - -பரமக்குடி நான்கு வழிச்சாலையில் சுங்கச்சாவடியில் பஸ் கட்டணம் செலுத்துவதற்காக நின்ற போது பின்புறம் உள்ள உள்பக்க டயரில் தீப்பிடித்துள்ளது. சுதாரித்த சுங்கசாவடி ஊழியர்கள் பஸ்சை நிறுத்தி டிரைவரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்து நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் பயணிகளை விரைவாக கீழே இறக்கி விட்டு தீயை அணைத்தனர். தொலை தூர அரசு பஸ்கள் போதிய பராமரிப்பின்றி இயக்கப்படுகிறது. பணிமனைகளில் டிரைவர், கண்டக்டர்கள் சொன்னாலும் உதிரிபாகங்கள் இல்லை என கூறி அப்படியே இயக்க வலியுறுத்துவதாக புகார் தெரிவிக்கின்றனர். கோடை வெயில் காலம் என்றாலும் அதிகாலையிலேயே பஸ் டயர் தீப்பிடித்தது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயணிகளை அடுத்தத்து வந்த பஸ்களில் அனுப்பிய பின், மதுரைக்கு கொண்டு சென்றனர். திருப்பாச்சேத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை