உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் அரசு டாக்டர்கள்  போராட்டம் 

சிவகங்கையில் அரசு டாக்டர்கள்  போராட்டம் 

சிவகங்கை : கோல்கட்டாவில் பெண் டாக்டர் கொலை சம்பவத்தை கண்டித்து சிவகங்கையில் அரசு டாக்டர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரிந்தனர்.கோல்கட்டாவில் கிளினிக்கில் இருந்த பெண் டாக்டர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம், நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தினர். நேற்று அடுத்த கட்டமாக மாவட்ட அளவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு டாக்டர்கள், சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து, தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். இன்று சிவகங்கை அரசு மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.இன்று ஒரு நாள் தனியார் கிளினிக்குகளில் காலை 6:00 மணி முதல் 24 மணி நேரத்திற்கு அவசர கால சிகிச்சை தவிர பிற சிகிச்சை மேற்கொள்வது இல்லை என முடிவு செய்துள்ளனர். இன்று அடையாள (காலை 7:30 முதல் 8:30 மணி வரை) வெளி நோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டமும் நடத்த உள்ளனர். அரசு டாக்டர், தனியார் கிளினிக்குகளுக்கான பாதுகாப்பு சட்டம் உடனே கொண்டு வர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை