உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாகனங்களை கண்காணிக்க ஜி.பி.ஆர்.எஸ்., கருவி

வாகனங்களை கண்காணிக்க ஜி.பி.ஆர்.எஸ்., கருவி

சிவகங்கை, : லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு பணிகள் மற்றும் ஓட்டு பதிவுக்கு பின்னர் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களை ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபடும் வாகனங்களைக் கண்காணிக்க சம்பந்தப்பட்ட வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ்., கருவி பொருத்தப்பட்டது.லோக்சபா தேர்தல் ஏப்.19 அன்று நடக்கிறது. சிவகங்கை லோக்சபா தொகுதியில் 6 எம்.எல்.ஏ., தொகுதிகள் உள்ளன. இதில் ஆலங்குடி, திருமயம் எம்.எல்.ஏ., தொகுதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புத்துார், காரைக்குடி, மானாமதுரை ஆகிய 4 தொகுதிகளில் உள்ள ஓட்டுப்பதிவு மையங்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி, ஓட்டுப் பதிவு முடிந்த பிறகு அவற்றை ஓட்டு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணிகளை தேர்தல் ஆணையம் கண்காணிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு பணிகளை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 30 வாகனங்கள் என மொத்தம் 120 வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இந்த வாகனங்களை கண்காணிக்க ஒவ்வொரு வாகனத்திலும் ஜி.பி.ஆர்.எஸ்., கருவி பொருத்தும் பணி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி