உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மருத்துவமனை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மருத்துவமனை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை : சிவகங்கையில் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் முன் தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலத்தலைவர் ரெங்கநாதன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மூவேந்தன், மாவட்ட செயலாளர் ஸ்ரீதர்ராஜ் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநிலத்தலைவர் குமார், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மகேஸ்வரன்,மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத்தலைவர் கண்ணன், ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க மாவட்டத்தலைவர் பத்மநாபன், அரசுப் பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் பூமிராஜன், மாவட்ட இணைச் செயலாளர் மருதுபாண்டியன் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் பொன்னுத்துரை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை