உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிமென்ட் கூரை விழுந்து காயம்

சிமென்ட் கூரை விழுந்து காயம்

தேவகோட்டை : கண்ணங்குடி ஒன்றியம் கங்கணி கிராமத்தில் 2001ம் அரசு சார்பில் காலனி குடியிருப்பு திட்டத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டன. இந்த வீடுகள் பராமரிப்பின்றி முற்றிலும் சேதமடைந்துள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் தர்மலிங்கம்.48., மனைவி சுமதி 38., மகள் லத்திகா 12 வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு தர்மலிங்கம் வீட்டில் இருந்தார். மனைவி, மகள் இருவரும் வெளியே சென்று இருந்தனர். அப்போது கான்கிரீட் கூரை இடிந்து விழுந்தது. இதில் தர்மலிங்கம் காயமடைந்தார். காயமடைந்த தர்மலிங்கம் தேவகோட்டை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை