உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வட்டியில்லா கடன்: திருச்சியில் நெட்வொர்க் தலைமை: கைதான மோசடி தம்பதி தகவல்

வட்டியில்லா கடன்: திருச்சியில் நெட்வொர்க் தலைமை: கைதான மோசடி தம்பதி தகவல்

நாச்சியாபுரம்:திருப்புத்துார் அருகே கள்ளிப்பட்டில் வட்டியில்லா வங்கிக் கடன் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் ரூ. 1000 வசூலித்த தம்பதியினரை போலீசார் கைது செய்து விசாரிக்கையில்,'தாங்கள் திருச்சியில் ஒருவரின் நெட்வொர்க்கில் இந்த மோசடியை செய்வதாக தெரிவித்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே கள்ளிப்பட்டுக் கிராமத்தில் நேற்று முன்தினம் தனியார் வங்கியைச் சேர்ந்தவர்கள் என்று கூறி 'வட்டியில்லாமல் வங்கிக் கடனாக ரூ. ஒரு லட்சம் வாங்கித் தருகிறோம்' என்று தம்பதிகளாக வந்த இருவர் ரூ.1000 வரை மக்களிடம் வசூலித்தனர். தனியார் வங்கி நிர்வாகத்தினர் புகாரின் பேரில் நாச்சியாபுரம் போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்தனர்.தனியார் வங்கியின் போலி அடையாள அட்டை வைத்திருந்ததும், இருவரும் புதுக்கோட்டை புலிச்சன்காட்டை சேர்ந்த செல்லம் மகன் மணிகண்டன் 28 மற்றும் ராமர் மகள் சித்ராதேவி 26 என்பதும், தம்பதியான இவர்கள் தற்போது மதுரை கே.புதுார் மாதாகோயில் தெருவில் வசிப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது. தொடர்ந்து விசாரிக்கையில், 'இவர்களுக்கு வழிகாட்டியாக திருச்சியில் கோபாலகிருஷ்ணன் என்ற பெயரில் ஒரு நபர் உள்ளார்.அவர் சமூக வலைதளங்களில் 'வட்டியில்லா வங்கிக் கடன்' குறித்து தகவல் அளிப்பார். அதற்கு பதிலளிப்பவரிடம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆட்கள் சேர அறிவுறுத்துகிறார். தொடர்ந்து தம்பதியர் போன்ற நபர்களிடம் ஊர் பெயரையும், தொடர்பு கொண்ட நபரையும் குறிப்பிட்டு அங்கு சென்று மோசடியை செய்ய உத்தரவிடுவது வழக்கமாக இருந்துள்ளது.

தமிழகம் முழுவதும் மோசடி

இந்த நெட் வொர்க்கில் பல தம்பதியர் உள்ளதும் தெரியவந்துள்ளது. வசூலிக்கும் பணத்தில் ஒரு பகுதியை தம்பதியர் வைத்துக்கொள்வதும், மீதித்தொகையை கோபாலகிருஷ்ணனுக்கு அனுப்பியுள்ளதும் தெரியவந்துள்ளது. பணம் தரும் நபர்களுக்கு வங்கி லிங்க் அனுப்புவதும், பாஸ்வேர்டு அனுப்புவதையும் கோபாலகிருஷ்ணனே செய்துள்ளார். பாஸ்வேர்டு வந்த ஒரு வாரத்தில் கடன் அனுமதியாகி விடும் என்று கூறி இவர்கள் தப்புவதும் வழக்கமாக கொண்டுள்ளனர். உண்மையில் தனியார் வங்கி திருச்சி கிளையில் கோபாலகிருஷ்ணன் என்பவர் உள்ளதும், அவர் பெயரை தனக்கு வைத்துக் கொண்டு அந்த நபர் இந்த மோசடி வேலையை தமிழகம் முழுவதும் செய்து வருவதும் தெரியவந்துள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை