| ADDED : மார் 25, 2024 06:53 AM
சிவகங்கை : தில்லுன்னா பழனிசாமி தான்... ஒப்பாரி வைப்பவர்களை எல்லாம் தொண்டர்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என சிவகங்கை அ.தி.மு.க.,எம்.எல்.ஏ., செந்தில்நாதன் பேசினார்.சிவகங்கையில் அ.தி.மு.க., சார்பில் மாவட்ட தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வேட்பாளர் சேவியர் தாஸ் உட்பட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எம்.எல்.ஏ., செந்தில்நாதன் பேசுகையில், தமிழகத்தில் தில்லுன்னா அது பழனிசாமிக்கு தான் இருக்கு. கட்சி வேட்டியை கட்ட முடியாமல் காவி வேட்டியை கட்டுபவரை எப்படி தலைவராக தொண்டன் ஏற்றுக் கொள்வான். ஒப்பாரி வைப்பவர்களை எல்லாம் தலைவனாக தொண்டன் ஏற்றுக்கொள்ள மாட்டான். பழனிசாமி மக்களிடம் ஒப்பாரி வைக்காத தலைவனாக இருக்கிறார். பா.ஜ.,வின் மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் அ.தி.மு.க., தொண்டன் அச்சப்பட மாட்டான். மக்களால் வெறுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட இயக்கம் தான் பா.ஜ., இந்தத் தேர்தல் நமக்கு தன்மான பிரச்னை. ஆகையால் உயிரை கொடுத்தேனும் தலைமை அறிவித்துள்ள வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.