உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு ஜூலை 15 கடைசி நாள் 

அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு ஜூலை 15 கடைசி நாள் 

சிவகங்கை, : சிவகங்கை மாவட்ட சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார பணியாளர், செவிலியர், துணை செவிலியர், மருத்துவமனை ஊழியர் பணியிடங்கள் நிரப்ப பட உள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் இயங்கும் துணை சுகாதார நிலையம், நலவாழ்வு மையம், நகர் நல மையம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய சுகாதார ஊழியர், செவிலியர், துணை செவிலியர், மருத்துவ மனை ஊழியர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஒலிப்பதிவாளர், நுண்கதிர் வீச்சாளர், புள்ளிவிபர குறிப்பாளர், மருத்துவமனை ஊழியர் காலியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பம் இன்று முதல் ஜூலை 15 மாலை 5:00 மணி வரவேற்கப்படுகிறது.பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. விண்ணப்பத்தை http:/sivaganga.nic.inல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தவிர மாவட்ட சுகாதார அலுவலகம், மருத்துவ இணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பம் பெறலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆவண நகலுடன் மாவட்ட சுகாதார அலுவலகம், இணை இயக்குனர் (மருத்துவம்) அலுவலகத்தில் ஜூலை 15 மாலை 5:00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை