உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஸ்கேட்டிங் போட்டி வீரர்களுக்கு பாராட்டு

ஸ்கேட்டிங் போட்டி வீரர்களுக்கு பாராட்டு

சிவகங்கை: இலங்கையில் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு வீர தமிழர் வடமாடு பேரவை சார்பில் பாராட்டு விழா நடந்தது.சிவகங்கை தனியார் பள்ளி மாணவர்களில், 14 வயது பிரிவில் காஞ்சி லக் ஷியா, 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் காஞ்சி ரித்தீஷ், தீபன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். சிவகங்கை காமராஜர் காலனியில் வீர தமிழர் வடமாடு பேரவை மாநில துணைப் பொதுச் செயலாளர் காஞ்சி செல்வம் தலைமையில் பாராட்டு விழா நடந்தது.கவுரவ தலைவர் தங்கராஜ், மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து, மாநில ஒருங்கிணைப்பாளர் கேசவன் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சால்வை அணிவித்து கேடயங்கள் வழங்கி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை