உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆக.22ல் கும்பாபிஷேக விழா ஜூலை 7ல் முகூர்த்தக்கால் நடுதல்

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆக.22ல் கும்பாபிஷேக விழா ஜூலை 7ல் முகூர்த்தக்கால் நடுதல்

இளையான்குடி: இளையான்குடி அருகேயுள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வரும் ஆக.22ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதனையொட்டி வரும் 7ம் தேதி முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற உள்ளது.தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் போது தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பல்வேறு நேர்த்திக் கடன் செலுத்தி அம்மனை வழிபட்டு செல்வர்.இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணி நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது வரும் ஆக.22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.வருகிற 7ம் தேதி கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற உள்ளது. கோயில் வளாகத்தில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற கிராம கூட்டத்தில் கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்துவது என்றும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை முழுமையாக செய்து கொடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நாளிலிருந்து கோயில் முன் பக்தர்கள் ஆடு,கோழிகளை பலியிடுவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை