உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆயுள் காப்பீடு பாலிசி புதுப்பிக்க  அவகாசம்: கண்காணிப்பாளர் தகவல் 

ஆயுள் காப்பீடு பாலிசி புதுப்பிக்க  அவகாசம்: கண்காணிப்பாளர் தகவல் 

சிவகங்கை; சிவகங்கையில் காலாவதி தபால் ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு முகாம் நடக்கும் என தபால் துறை கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, மார்ச் 1 முதல் மே 31 ம் தேதி வரை இச்சிறப்பு முகாம் தபால் நிலையங்களில் நடைபெறும். காலாவதியான தபால் ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அபராத தொகை தள்ளுபடி செய்யப்படும். அபராத தொகையில் அதிக பட்சம் 30 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் காலாவதியான ஆயுள் காப்பீடு பாலிசியை தபால் நிலையங்களுக்கு சென்று புதுப்பித்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு வளர்ச்சி அதிகாரியிடம் 93420 93829 தொடர்பு கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை