உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேசிய சிலம்ப போட்டியில் மானாமதுரை மாணவர்கள் சாதனை

தேசிய சிலம்ப போட்டியில் மானாமதுரை மாணவர்கள் சாதனை

மானாமதுரை : நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த தேசிய சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற சிலம்ப மாணவர்களுக்கு மானாமதுரையில் வரவேற்பு அளித்தனர்.மானாமதுரையில் வீர விதை சிலம்ப பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் சிலம்பம் பயின்று வருகின்றனர். இவர்கள் மாவட்ட, மாநில, தேசிய சிலம்ப போட்டிகளில் வெற்றி பெற்று வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த தேசிய சிலம்ப போட்டியில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா, ஆந்திராவை சேர்ந்த மாணவர்களுடன், மானாமதுரை மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 8 பேர் முதல் பரிசு, 7 பேர் இரண்டாம் பரிசும், 9 பேர் மூன்றாம் பரிசும் பெற்றனர். வெற்றி பெறறு நேற்று மானாமதுரை வந்த மாணவர்களுக்கு ஆனந்தவல்லி அம்மன் கோயில் அருகே பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை