உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வடவன்பட்டியில் புதிய டிரான்ஸ்பார்மர்

வடவன்பட்டியில் புதிய டிரான்ஸ்பார்மர்

சிங்கம்புணரி : தினமலர் செய்தி எதிரொலியாக வடவன்பட்டி ஊராட்சியில் புதிய மின் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.இவ்வொன்றியத்தில் வடவன்பட்டி ஊராட்சி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறைந்தழுத்த மின்சாரத்தால் மக்கள் அவதிப்பட்டனர்.மின்மோட்டார்கள் அடிக்கடி பழுதானது. இது குறித்து தினமலர் இதழில் செய்தி வெளியானது. இச்செய்தி எதிரொலியாக கலெக்டர் ஆஷா அஜித் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளை சம்பந்தப்பட்ட பகுதிக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நேற்று வடவன்பட்டி ஊராட்சியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. 20க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் கிராமத்தில் முகாமிட்டு ஒரே நாளில் புதிய டிரான்ஸ்பார்மரை அமைத்து மின் விநியோகத்தை சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை