உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கழிவுநீர் கலப்பதால் பாழாகும் ஊருணி

கழிவுநீர் கலப்பதால் பாழாகும் ஊருணி

சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியத்தில் பிரான்மலை ஊராட்சியில் பள்ளி மாணவிகள் விடுதி அருகே பழமையான முத்துக்கருப்ப ஊருணி உள்ளது. இந்த ஊருணியை சீரமைத்து தண்ணீர் தேக்கி நடைபாதை அமைக்க 10 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை முயற்சித்தது.ஆனால் நடுவே சுவர் கட்டியதுடன் பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது ஊருணியைச் சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது.பாம்புகளின் புகலிடமாக மாறிவிட்டது.மேலும் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் இந்த ஊருணிக்குள் கலப்பதால் துர்நாற்றம் வீசி அருகே இருக்கும் குடியிருப்பு வாசிகள் மற்றும் விடுதி மாணவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இதில் கழிவுநீர் கலக்காதவாறு கட்டமைப்புகளை ஏற்படுத்தி மழை நீரை சேமித்துசுகாதாரமான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ