உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்கும் ஊராட்சி; ஆக.15ல் கிராம சபையில் விவாதம்   

ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்கும் ஊராட்சி; ஆக.15ல் கிராம சபையில் விவாதம்   

சிவகங்கை : சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக., 15ல் நடக்கும் கிராம சபை கூட்டத்தில், வீடுகள் தோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும், ஆக., 15 அன்று காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்.இக்கிராம சபை கூட்டங்களில் விவாதிக்கப்பட வேண்டி முக்கிய பொருட்கள் குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் வசூலிக்கப்படும் வரிகளை இணைய வழியில் பெற வேண்டும். வீடு, குடிநீர், தொழில் வரி மட்டுமின்றி இதர வரிகளை இணைய வழியில் மட்டுமே பெற வேண்டும் அதற்கான விழிப்புணர்வை வைக்க வேண்டும். கிராம ஊராட்சிகள் மூலம் வீட்டு மனைக்கான அங்கீகாரம் மற்றும் கட்டட அனுமதி பெற www.onlineppa.tn.gov.inஎன்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிளான் அப்ரூவல், கட்டட அனுமதி பெறலாம். இவை குறித்தும் கிராம சபையில் விழிப்புணர்வு அளிக்க வேண்டும். அதே போன்று ஜல்ஜீவன் குடிநீர் திட்டம் மூலம் வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பதை உறுதி செய்ய வேண்டும்.இதற்காக 10 சதவீத சமூக பங்களிப்பு அளிப்பதின் மூலம் குடிநீர் வினியோக பணிகளில் அனைவரையும் பங்கெடுக்க செய்ய வேண்டும்.வீடுகள் தோறும் வழங்கும் குடிநீரின் தரத்தினை 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும்.அனைத்து கிராம ஊராட்சிகளையும், வீடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி என்ற நிலைக்கு மேம்படுத்த வேண்டும்.கிராம ஊராட்சிகளில் உள்ள பள்ளி, அங்கன்வாடி மையம், அரசு அலுவலகங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.இது போன்ற விழிப்புணர்வை ஆக., 15 சுதந்திர தினத்தன்று நடக்கும் கிராம சபை கூட்டத்தில் மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி