உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பறக்கும்படை வாகன ‛சுழல் கேமரா அகற்றம்; தேர்தல் கண்காணிப்பிற்கு சிக்கல்   

பறக்கும்படை வாகன ‛சுழல் கேமரா அகற்றம்; தேர்தல் கண்காணிப்பிற்கு சிக்கல்   

சிவகங்கை : தேர்தலுக்காக பறக்கும் படை, நிலையான, வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களில் பொருத்தியிருந்த சுழலும் கேமராக்களை அகற்றியதால், தேர்தல் விதிமீறல் கண்காணிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதியை மீறி உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு செல்வது, ஓட்டுக்காக பரிசு பொருட்கள் எடுத்து செல்லுதல், வாகன விதிமீறல் போன்றவற்றை கண்காணிக்க குழு நியமித்துள்ளனர். ஒரு சட்டசபை தொகுதிக்கு 3 வாகனங்கள் வீதம் பறக்கும் படை, நிலையான, வீடியோ கண்காணிப்பு ஆகிய 3 குழுவிற்கும் என மொத்தமாக 24 வாகனங்களில் தாசில்தார், துணை தாசில்தார், பி.டி.ஓ., துணை பி.டி.ஓ., அந்தஸ்தில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த குழுவினர் முறையான சோதனையில் ஈடுபடுகிறார்களா என்பதை கண்காணிக்க, ஒவ்வொரு வாகனத்திலும் 'ஜி.பி.எஸ்.,' கருவி, வாகனத்தின் மேல்பகுதியில் 360 டிகிரி' சுழலும் கேமரா பொருத்தியிருந்தனர். வாகனத்தின் மேற்பகுதியில் பொருத்திய சுழலும் கேமரா வாகன அதிர்வு காரணமாக உடைந்து விடுகிறது. இதனால், வாகனத்தின் மேற்பகுதியில் பொருத்தியிருந்த சுழலும் கேமராக்களை அகற்றிவிட்டனர்.இதனால், சோதனையில் ஈடுபடும் அதிகாரிகளை 'ஜி.பி.எஸ்.,' கருவி மூலம் கண்காணிக்க மாவட்ட தேர்தல் அலுவலகம் முடிவு செய்துள்ளது. அதே நேரம் சுழலும் கேமரா இல்லாததால் சிரமமாக இருப்பதாக பறக்கும் படை குழுவினர் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை