உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரோட்டோர குழாய் பதிப்பு ; குழிகளை மூட கோரிக்கை

ரோட்டோர குழாய் பதிப்பு ; குழிகளை மூட கோரிக்கை

திருப்புத்துார்:திருப்புத்துார் அருகே பட்டமங்கலத்தில் குடிநீர் திட்ட பள்ளங்களை சீராக மூட பொதுமக்கள் கோரியுள்ளனர்.திருப்புத்துார் கிராமங்களில் பரவலாக குடிநீர் திட்டம்,காவிரி குடிநீர் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. பட்டமங்கலத்தில் குடிநீர் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக குழாய்கள் ரோட்டோரத்தில் பதிக்கப்படுகிறது. சாலை சந்திப்பில் இந்த பணி நடைபெறுகிறது. குழாய் பதிக்க தோண்டப்படும் மண்ணை சரியாக மூடாமல் பெயரளவில் நிரப்பிச் செல்கின்றனர். இதனால் சாலையோரம் மேடும் பள்ளமுமாக மாறி விட்டது. வீடுகளிலிருந்து சாலைக்கு வர பொதுமக்கள் தடுமாறுகின்றனர்.இதே நிலை பல கிராமங்களில் உள்ளது. புதிய ரோடு அமைக்க தாமதமாகும் என்பதால் குழாய் பதித்த பின் ரோட்டில் பள்ளத்தை ஒரே மட்டமாக சீரமைக்க ஒப்பந்தகாரர்கள் முன்வர பொதுமக்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை