உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் 

சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் 

சிவகங்கை, : மாநில நெடுஞ்சாலையை ஆணையத்திடம்ஒப்படைத்த தமிழக அரசை கண்டித்து சிவகங்கையில் சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.சிவகங்கை நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மாரி தலைமை வகித்தார். துணை தலைவர் ராஜா வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணை தலைவர் பாண்டி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் பெருமாள் ஆகியோர்பேசினர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில பொருளாளர்தமிழ் விளக்க உரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் சதுரகிரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை