உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பள்ளி மாணவர்கள் சென்றவேன் விபத்தில் சிக்கியது

பள்ளி மாணவர்கள் சென்றவேன் விபத்தில் சிக்கியது

சிவகங்கை: சிவகங்கை அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் மாணவர்கள் தப்பினர்.சிவகங்கை அருகே பனங்காடி ரோட்டில் உள்ளது கேந்திர வித்யாலயா பள்ளி. நேற்று பள்ளிக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டு காலை 11:30க்கு மாணவர்கள் வீட்டிற்கு செல்ல துவங்கினர். இந்த பள்ளியில் காளையார்கோவில் பகுதியில் இருந்து படிக்கும் மாணவர்கள் தனியார் வாகனம் மூலம் வந்து செல்கின்றனர். மாணவர்கள் 17 பேர் நேற்று காலை 11:40 மணிக்கு பள்ளியில் இருந்து தனியார் வேன் மூலம் காளையார்கோவில் பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றனர்.வேனை புளியடிதம்பம் அருகே உள்ள திட்டகோட்டையை சேர்ந்த திருநாவுக்கரசு 39 இயக்கினார். வேன் சிவகங்கை அருகே பி.குளத்துப்பட்டி விலக்கு பகுதியில் சென்றபோது ஓட்டுனர் திருநாவுக்கரசின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் வேனில் இருந்த மாணவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மாணவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மாணவர்களை டாக்டர்கள் பரிசோதித்ததில் இரண்டு மாணவர்களுக்கு மட்டும் சிறு காயம் ஏற்பட்டது தெரியவந்தது. மாணவர்கள் அனைவரும் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை