| ADDED : ஜூலை 25, 2024 11:45 PM
இளையான்குடி : இளையான்குடி புது பஸ் ஸ்டாண்டிலிருந்து பழைய பஸ் ஸ்டாண்டுக்கு அனைத்து பஸ்களும் வந்து செல்ல வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் சார்பில் நேற்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.இளையான்குடியில் அரசு மருத்துவமனை அருகே செயல்படும் பழைய பஸ் ஸ்டாண்டில்போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டு வந்ததை தொடர்ந்து இளையான்குடி-சிவகங்கை ரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.புதிய பஸ் ஸ்டாண்டில்இருந்து பழைய பஸ் ஸ்டாண்டுக்கு அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டுமென்று மனிதநேய ஜனநாயக கட்சியினர், வியாபாரிகள் சங்கத்தினர், பல்வேறு ஜமாத்தை சேர்ந்தவர்கள், ஆயிர வைசிய சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டமும், கடையடைப்பு போராட்டமும் நடத்த உள்ளதாக அறிவித்தனர்.இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் கோட்டாட்சியர் விஜயகுமார் தாசில்தார் (பொ)ஆனந்த் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் நஜூமுதீன், துணைத் தலைவர்இப்ராஹிம், செயல் அலுவலர் கோபிநாத், மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் பசீர் அகமது, சைபுல்லாஹ், சலீம், உஸ்மான், உமர், அபூபக்கர், சாகுல், ஜமால் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இளையான்குடி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்டுக்குஅனைத்து தனியார் பஸ்கள், அரசு டவுன் பஸ்கள் மட்டும் நேற்று முதல் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் பல்வேறு அமைப்பினர் அறிவித்திருந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.இந்நிலையில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நேற்று அனைத்து வியாபாரிகளும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் இளையான்குடி நகர் பகுதி வெறிச்சோடியது.