உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாநில இளைஞர் விருது விண்ணப்பம் வரவேற்பு

மாநில இளைஞர் விருது விண்ணப்பம் வரவேற்பு

சிவகங்கை, : தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் விதமாக முதல்வர் மாநில இளைஞர் விருது சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள். 3 பெண்களுக்குவழங்கப்படுகிறது.விருது பெற ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். 2023 ஏப்.1 முதல் 2024 மார்ச் 31 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.விருதிற்கு விண்ணப்பிப்பவர் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்.விண்ணப்பங்கள் www.sdat.tn.gov.inஎன்ற இணைய தளத்தில்மே 15 அன்று மாலை 4:00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.இணையத்தில் சமர்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவம் நகல் மற்றும் உரிய ஆவணங்கள் 3 நகல்கள், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, காவல் துறையிடமிருந்து சரிபார்ப்பு சான்றிதழ் ஆகியவைகளை 2024 மே 18 மாலை 4:00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்