உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசின் கல்வி உதவித்தொகைக்கு   தபால் நிலையத்தில் கணக்கு கண்காணிப்பாளர் தகவல் 

அரசின் கல்வி உதவித்தொகைக்கு   தபால் நிலையத்தில் கணக்கு கண்காணிப்பாளர் தகவல் 

சிவகங்கை:பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகையை பெற அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு துவக்க ஜூலை 15 வரை சிறப்பு முகாம் நடைபெறும் என தபால் கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.மாரியப்பன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இந்திய அஞ்சல்துறையும், கல்வித்துறையும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி தொகையை வரவு வைக்கும் வகையில் பயனீட்டு தொகை பெற தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் எவ்வித குறைந்த பட்ச தொகையும் இன்றி 'ஜீரோ' பேல்ன்ஸ்- அஞ்சலக சேமிப்பு மற்றும் ஐ.பி.பி.எஸ்., கணக்கு துவக்க ஒப்பந்தம் செய்துள்ளது.தபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்கு துவக்க, மாணவர்கள் ஆதார் அட்டை, அடையாளஅட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பெற்றோரின் அலைபேசியுடன் வர வேண்டும். இதற்காக சிவகங்கை, மானாமதுரை தலைமை தபால் நிலையங்களில் காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை ஆதார் மையம் செயல்படும். இது தவிர சில துணை தபால் நிலையங்களிலும் ஆதார் மையம் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை செயல்படும். பெற்றோர் தங்களது குழந்தைகளின் கல்வி உதவி தொகையை தபால் சேமிப்பு கணக்கில் பெற ஏதுவாக கணக்கு தொடங்கலாம். இதற்கான சிறப்பு முகாம் தபால் நிலையங்களில் ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை