| ADDED : ஆக 21, 2024 07:37 AM
சிவகங்கை : சிவகங்கை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துச்சாமி வரவேற்றார். மாநில தலைவர் சேதுசெல்வம் கோரிக்கையை விளக்கி பேசினார். ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும். ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து அதற்கான ஊதியத்தைப் பெறும் உரிமையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெய்சங்கர், குருமூர்த்தி, முருகன், மாவட்ட இணைச் செயலாளர்கள் முகமது இஸ்மாயில், சின்னையா, நடராஜபாண்டியன் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ஞானசம்பந்தன் நன்றி கூறினார்.