உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தாயமங்கலம் கோயிலில் தேர் பவனி ஏராளமான பக்தர்கள் தரிசனம்

தாயமங்கலம் கோயிலில் தேர் பவனி ஏராளமான பக்தர்கள் தரிசனம்

இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவையொட்டி நேற்று நடைபெற்ற மின் அலங்கார தேர்பவனியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தாயமங்கலம் கோயிலில் பொங்கல் விழா கடந்த 28ம் தேதி இரவு 10:50 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. நேற்று இரவு 7:10 மணிக்கு கோயில் முன் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்து. தேரில் அலங்காரங்களுடன் உற்ஸவர் அம்மன் எழுந்தருளினார்.கூடியிருந்த பக்தர்கள் தேரை இழுத்து வந்தனர். அம்மனுக்கு அபிஷேக ,ஆராதனை நடைபெற்றன. விழாவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன், சிவகங்கை மாவட்ட கூட்டுறவு அதிகாரி போஸ், பிராந்தமங்கலம் வெள்ளைச்சாமி தேவர் குடும்பத்தினர்,புக்குழி நாட்டார்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,மதியரசன்,தமிழரசன்,அன்பரசன், முருகன்,பூசைத்துரை,சுப்பிரமணியன், அர்ஜுன் பாண்டியர்,மார்த்தாண்டன், முத்துக்குமார்,முருகேசன்,பெரியசாமி, முத்துசாமி,முத்துக்குமார், கவாஸ்கர், உச்சி ராசா, முருகன், முத்து செல்வம், ஆதித்தன், திருக்கோயில் பணியாளர்கள் தாயமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை 7:40 மணிக்கு பால்குடம் நிகழ்ச்சியும், மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவம் நிகழ்ச்சியும் இரவு 10:00 மணிக்கு புஷ்ப பல்லாக்கும் நடைபெற உள்ளது.ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ